த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்மந்தனுக்கு காருக்குள் வீழ்ந்த குத்து.
கடந்த 15ம் திகதி பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, யாழ்ப்பாணத்திற்கு விரைந்தார்கள் சிறீலங்காவின் விசுவாசிகள் சம்பந்தரும் சுமந்திரனும்.
கூட்டமைப்பின் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு துரோகம் இழைப்பதாக பரவலான குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பந்தர், சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர், தமது பிள்ளைகள், சகோதரர்கள், கணவன்மார்கள் காணமல் போனதால் வாழ்க்கையை தொலைத்துவிட்டு ஏங்கி நிற்கும் உறவுகள் பிரித்தானிய பிரதமரை சந்திக்க விடாமல் காய்வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டு வலுவாகவுள்ளது.
இதனால், ஆத்திரம் மேலிட கொந்தளிப்புடன் காத்திருந்தனர் உறவுகள். யாழ்ப்பாணத்தில் சிங்கக் கொடியேற்றிய சம்பந்தர் தனது குளிரூட்டப்பட்ட சொகுசு வாகனத்தில் வந்தார் . கொதிப்படைந்த மக்கள் சூழ்ந்தனர் வாகனத்தை. சம்பந்தரை வெளியே இழுத்து உதைக்காத குறை. அச்சத்தில் ஆடிப்போனார் சம்பந்தர். மீதியை நீங்களே கீழுள்ள வீடியோவில் பாருங்கள்.
Post a Comment Blogger Facebook