முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசத்தின் பொன்னகர் கிராமத்தில்
இன்று சமூக பொருதார அபிவிருத்தித் திட்ட திறப்பு விழா இடம்பெற்றுள்ளது . இந்திய உதவியுடன் கையளிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த சுமார் 50 குடும்பங்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தால் ( ஐஓஎம் ) மேற்கொள்ளப்பட்ட சுழற்சி முறையிலான கடன் வழங்கல் கிணறு மற்றும் சூரிய மின்சக்தியினால் இயங்கும் நீர்ப்பம்பி ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டமே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது .
இன்று பிற்பகல் 3 மணியளவில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவியின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இமாவட்ட அரசாங்க அதிபர் திரு.நா. வேதநாயகன் உதவி பிரதேசச் செயலர் திரு . குருபரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கிராம அலுவலர் திரு . கரிகாலன் மற்றும் ( ஐஓஎம் ) நிறுவன உத்தியோகத்தர்கள் இஅக்கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
முதலாக அபிவிருத்தித் திட்டப் பெயர்ப்பலகை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது . பின்னர் சூரிய மின்வலுவில் இயங்கும் நீர்ப்பம்பி கரைத்துறைப்பற்று உதவி பிரதேசச் செயலாளரால் இயக்கிவைக்கப்பட்டது . தொடர்ந்து பொதுக்கிணறு ஒன்றை அரசாங்க அதிபர் திறந்து வைத்தார் . அதன் பின்னர் கலந்துகொண்ட பிரமுகர்களால் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது .
தொடர்ந்து வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அரசாங்க அதிபர் உதவி பிரதேசச் செயலர் மற்றும் ( ஐஓஎம் ) நிறுவன உத்தியோகத்தர்களால் சிறப்புரை ஆற்றப்பட்டது .
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தனதுரையில்
யுத்தத்தால் கடும் அழிவுகளைச் சந்தித்து வாழ்வாதாரம் நலிவடைந்த எங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிற இவ்வுதவிகளுக்கு எனது நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள் . இந்நிறுவனத்தின் செயற்பாடு மேலும் பல நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது . மக்களும் இறுதி யுத்த காலத்திற்கு முன்பிருந்தது போல தமது சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் . மேலும் உங்களுக்குரிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் முதல் அனைத்துவிதமான வாழ்வியல் பிரச்சினைகளையும் என்னிடம் அடையாளம் காட்டுங்கள் . என்னாலியன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வேன் .. என்றார் .
வன்னி நிருபர் .
Home
»
Srilanka
»
Srilankanews
» முல்லைத்தீவில் சமூக பொருளாதார அபிவிருத்தித்திட்ட திறப்புவிழா (படங்கள் இணைப்பு)
Subscribe to:
Post Comments (Atom)








Post a Comment Blogger Facebook