யாழ். சுதுமலை வீதியில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் 2 பவுண் தங்கச்சங்கிலி ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அறுத்துச் சென்றுள்ளனர். சுதுமலை வடக்கைச் சேர்ந்த பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியே இவ்வாறு அறுத்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஆலயத்திற்கு சென்றுவிட்டுத் திரும்பும்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் இருவரே தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது தங்கச்சங்கிலி அறுத்துச்செல்லப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில சங்கிலியைப் பறிகொடுத்த பெண் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, யாழ். இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 4.5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருட்டுப்போயுள்ளமை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வீட்டிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு தங்கநகைகள் திருட்டுப்போயுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்தவர்கள்; தங்கநகைகளை திருடிச்சென்றுள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment Blogger

 
Top