நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட புத்திரகண்டான் ; விவசாய கிராமத்தில் உள்ள
மூன்று கழிவு நீர் வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளமையினால் அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாய மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பாக வடமாகாண விவசாய அமைச்சர் பி . ஐங்கர நேசன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கலான செல்வம் அடைக்கலநாதன் , எஸ் . வினோ நோகராதலிங்கம் ஆகியோரது
கவனத்திற்கும் கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர் .

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில் ,


நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட புத்திரகண்டான் குளத்தின் கீழ் 90 ஏக்கர் காணி உள்ளது . அதில் 60 ஏக்கர் காணிக்கு மூன்று கழிவு நீர் வாய்க்கால் உள்ளது .

ஆனால் தற்போது மூன்று கழிவு நீர் வாய்க்காலும் மூடப்பட்டு விட்டது . தற்போது பெரும் போக விவசாயம் செய்யும் காலமும் வந்து விட்டது .

ஆனால் குறித்த வாய்க்கால் இல்லாமல் தற்போது விவசாயம் செய்வதில் அக்கிராம விவசாய மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம் .

முதலாவது வாய்க்கால் புத்திரகண்டான் ; குளத்தில் ; இருந்து வந்து நானாட்டான் வீதியில் இருக்கும் குழாயினூடாக கார்மேல் மாதா கோயிலுக்கருகாமையில் உள்ள வாய்க்காலைச் சென்றடைகின்றது .

குறித்த வாய்க்காலை அதற்கு அருகாமையில் குடியிருக்கும் சிலர் மூடி விட்டனர் . தற்போது குறித்த வாய்க்கால் திறக்கப்பட்டு புனரமைக்கப்படாது விட்டால் அப்பகுதியில் குடியிருப்போரும் , விவசாய செய்கைகளும் வெள்ளத்தில் மூழ்கவேண்டிய நிலை ஏற்படும் .

இவ் வாய்க்கால் அமைந்திருக்கும் காணியில் குடியிருப்பவர்கள் அடாத்தாக குடியிருப்பவர்களாவர் .

இந்த வாய்க்கால் பல வருடங்களாக உள்ளது . இக்காணிக்கு உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அடாத்தாக உள்ளவர்கள் போலி உறுதி எழுதி குறித்த வாய்க்காலையும் மூடி குடியமர்ந்துள்ளனர் .

இரண்டாவது கழிவு வாய்க்காலனது அளவக்கை , ஆத்திக்குழி சேமக்காளை வீதி அமைத்ததால் மூடப்பட்டு விட்டது .

இவ் வீதி கிராம அபிவிருத்திச்சங்கத்தின் கலந்துரையாடலினூடாக அமைக்கப்பட்ட போதும் விவசாயிகளிடம் இது தொடர்பாக எந்த ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை .

 இது தொடர்பாக கேட்கப்போனதிற்கு எங்களை விரட்டி விட்டார்கள் .

நாங்கள் உடனடியாக இதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் , உரிய அமைப்பிடமும் சொன்னோம் .

எந்த முடிவும் எடுக்கவில்லை . உரிய பொறியியளாளரிடமும் கூறினோம் . ஆனால் இந்த வாய்க்கால் இது வரை திறக்கப்படவில்லை .

குறித்த வாய்க்கால் திறக்கப்படாது விட்டால் நாங்கள் பெரும்போகம் செய்ய முடியாது . இதனால் நாங்கள் உணவிற்காக துண்பப்படும் நிலை ஏற்படும் . எனவே உரிய அதிகாரிகள் ; குறித்த விடையத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . என அந்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Post a Comment Blogger

 
Top