அச்சுவேலியிலிருந்து யாழ் ஆஸ்பத்திரி வீதி ராஜாவின் தோட்டத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற 21
வயது நிரம்பிய இளம் யுவதி ஒருவரை250-1173 என்ற நீல நிற ஹயஸ் வாகனத்தில் பின் தொடர்ந்த 2 வாலிபர்கள் தமது தொலைபேசி இலக்கத்தை இலக்கத்தை எழுதி 2 முறை அப்பெண் மீது எறிந்துள்ளார்கள் .

தொடர்ந்தும் அப்பெண்ணை பின்தொடர்ந்த இருவரும் அவரது உறவினர் வீட்டின் முன்னால் வைத்து கடத்த முற்பட்டவேளை அப் பெண் கத்தவே பெண்ணின் உறவினர்களும் அயலவர்களும் சேர்ந்து அப்பெண்ணை காப்பற்றி வாலிபர் இருவரையும் பிடித்துள்ளனர் .

உடனே அவ் வாலிபர்கள் இருவரும் யாழ் காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்ட சிறிது நேரத்தில் 500 இராணுவத்தினர் வந்து கிராமத்தை சுற்றி வளைத்து மக்களிடமிருந்து அவ் இருவரையும் காப்பற்றி சென்றுள்ளனர்

Post a Comment Blogger

 
Top