சர்வதேச அழுத்தம் இலங்கை மீது தொடர்ந்தாலே போர் குற்றம் தொடர்பில் தீர்வினை எட்ட முடியும்.சர்வதேச மன்னிப்பு சபை.
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தொடர்ந்தும் அக்கறை
காட்டவேண்டுமானால் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது .
சர்வதேச மன்னிப்பு சபை பொதுச்செயலாளரின் பணிப்பாளர் ஸ்டீவ் க்ரௌசோ இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் . சர்வதேச சமூகத்துக்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது ஒரு சவாலாக அமைந்துள்ளதாக ஸ்டீவ் குறிப்பிட்டுள்ளார் .
இலங்கையில் மனித உரிமைமீறல் சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது அங்கு பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தியமை ஏற்றுக்கொள்ளதக்க செயலல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
எனினும் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களை தொடர்ந்தும் பிரயோகிக்கும் போதே போர்க்குற்றம் உட்பட்ட பல விடயங்களுக்கு தீர்வுகளை எட்டமுடியும் என்று சர்வதேச மன்னிப்பு சபையின் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்

Post a Comment Blogger Facebook