இரசாயனங்கள் மூலம் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கான தேசிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடன், அதிகாரிகளுக்கு இன்று விசேட பயிற்சியளிக்கப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் விமல் ரூபசிங்க தெரிவித்தார்.

இரசாயனப் பொருட்களை பயன்படுத்தும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பும், பயிற்சியும் கொழும்பில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரசாயன பாதார்த்த பாவனையின் போது ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு இந்த பயிற்சிகள் உதவியாக அமையுமென அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் இரசாயன தொழிற்சாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களும், பணியாளர்களும் அவதானமாகவும், பாதுகாப்பாகவும் செயற்படுதல் மற்றும் இரசாயனங்களை கையாளுதல் தொடர்பில் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

தற்போதுள்ள இரசாயன பொருட்களால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்படவுள்ளதாக விமல் ரூபசிங்க சுட்டிக்காட்டினார்.

Post a Comment Blogger

 
Top