இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியின் முதற்கட்டம் எதிர்வரும் 24 ஆம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில், இந்த தலைமைத்துவ பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதற்குத் தகுதிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இதுதொடர்பில் உயர்கல்வி அமைச்சின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கு பொருத்தமான பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடநெறி என்பனவற்றை வகைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

Post a Comment Blogger

 
Top