தனது அன்­புக்­கு­ரிய கணவர் இறந்­ததால் பெரிதும் துய­ர­டைந்த பெண்­ணொ­ருவர்,
கண­வ­ரது சட­லத்தின் அருகில் ஒரு வருட காலம் படுத்து உறங்­கிய நெஞ்சை
நெகி­ழ­வைக்கும் சம்­பவம் பெல்­ஜி­யத்தில்(சுவிஸ்) இடம்­பெற்­றுள்­ளது.
பிர­ஸல்ஸை சேர்ந்த மேற்­படி பெயர் வெளி­யி­டப்­ப­டாத பெண்ணின் (69 வயது)
கண­வ­ரான மார்சல் எச் (79 வயது) கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்­துமா
நோயால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்தார்.
இந்­நி­லையில் தனது கண­வரின் மர­ணத்தை தாங்கிக் கொள்ள முடி­யாத மனைவி,
கண­வரின் சட­லத்தை நல்­ல­டக்கம் செய்­யாது படுக்­கையில் வைத்­தி­ருந்து,
அதி­லி­ருந்து வீசிய துர்­நாற்­றத்­தையும் பொருட்­ப­டுத்­தாது அத­ன­ருகே உறங்கி வந்­துள்ளார்.
மேற்­படி தம்­ப­தி­யினர் தாம் குடி­யி­ருந்த வாடகை வீட்­டுக்கு கடந்த ஆண்­டி­லி­ருந்து
வாட­கையை செலுத்­தா­ததால் சின­ம­டைந்த வீட்டு உரி­மை­யாளர் பொலிஸில்
செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து குறிப்­பிட்ட வீட்­டிற்கு பொலிஸார்
வந்­த­போதே அங்கு மார்சல் எச்சின் சடலம் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.
வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக மார்சல் எச்சின் சடலம் உலர்ந்து
காணப்பட்டது. அதேசமயம் அவரது உள் உறுப்புகளும் அழுகி உலர்ந்திருந்தன.

Post a Comment Blogger

 
Top