கோவிலில் அன்னதானம் வழங்குவது சம்பந்தமாக இரு பகுதியினருக்கு இடையே நீண்ட
நாட்களாக காணப்பட்ட பகையின் காரணமாக இன்று பகல் அன்னதானம் வழங்குவதற்காக போடப்பட்ட பந்தல் அடித்துடைக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே குறிப்பிட்ட இரு தரப்பினருக்கும் இருந்த பகைமை காரணமாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட இரு தரப்பினனரும் அமைதிக்குப் பங்கம் எற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியதுடன் , அன்னதானம் குறிப்பிட்ட பொது இடத்தில் பந்தல் போட்டு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது .

இந்நிலையில் , பந்தல் போடப்பட்டு அனைத்துப் பணிகளும் நிறைவுற்று இருந்த நிலையில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்த ஒரு குழுவினர் , இந்த பந்தலை அடித்துடைத்து விட்டுச் சென்றுள்ளனர் . சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன

Post a Comment Blogger

 
Top