நல்லூர் ஆலய சுற்றாடலுக்கு அண்மையாக உள்ள வைமன் வீதியிலுள்ள வீடொன்றில் தனிமையாக
வசித்த பெண்களை வாளினால் வெட்டி காயப்படுத்திவிட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் மற்றும் சுமார் பத்து பவுன்களுக்கு மேற்பட்ட நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் .

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு நல்லூர் வைமன் வீதியில் இடம்பெற்றுள்ளது . இரவு நேரம் வீட்டினுள் நுழைந்து ஆயுதம் தாங்கிய குழுவினர் தனிமையிலிருந்த பெண்கள் மூவரையும் பயமுறுத்தி கொள்ளையிட முற்பட்ட்ய்ள்ளார்கள் . இரு பெண்கள் எதிர்க்கவே அவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்கள் . வாள்வெட்டுக்கு உள்ளாகிய நிலையில் காயங்களுடன் கே . பரமேஸ்வரி வயது 60 மற்றும் உறவினரான எஸ் . ரேனுகா வயது 24 என்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

ஆலயச் சுற்றாடலில் கடைகள் அமைப்பவர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் காணப்பட்ட வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது . யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர் .

Post a Comment Blogger

 
Top