வடமராட்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.
வடமராட்சி மணற்காடு , குடத்தனை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில்
மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தவர்கள் பொலிஸாராரும் படையினர் இணைந்து கைது செய்தனர் .
இச்சம்பவம் இன்று அதிகாலை வடமராட்சி முள்ளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது .
அண்மைக்காலமாக மணற்காடு , குடத்தனை பகுதியிகளில் இருந்து பொலிஸார் மற்றும் படையினரின் கண்களில் மண்ணைத்துவி விட்டு மாட்டு வண்டில்களில் மணல் அகழ்ந்து செல்லும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ள .
பொலிஸாரின் பார்வை லொறி மற்றும் உழவு இயந்திரங்கள் மீது இருந்தமையால் சிறிய மாட்டு வண்டில்களை பயன்படுத்தி இக்கும்பல் மேற்கொண்ட மணல் கடத்தல் இதுவரை கண்டுபிடிக்காமல் இருந்தது .
இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற ஐந்து மாட்டு வண்டில்களை பொலிஸார் மறித்து சோதனை சோதனை செய்த போது இந்த சட்டவிரோத மண் அகழ்வு தெரிய வந்தது .
சம்பந்தப்பட்டவர்களைத் கைது செய்த வடமராட்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் .

Post a Comment Blogger Facebook