k1958வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை மையமாக கொண்டு முழுமையான அரசியல் வெளியில் 1977 ம்
ஆண்டு நடந்த தேர்தலில் , மக்கள் தங்களின் அரசியல் அபிலாசையினை வெளிப்படுத்தினார்கள் . நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் வெளிக்குள்ளேயே நடத்தப்பட்டுள்ளது . எனவே 1977 ம் ஆண்டுத் தேர்தலையும் மாகாணசபைத் தேர்தலையும் ஒரே தராசில் இட்டுப்பார்க்க முடியதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி . உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் அமெரிக்காவில் தமிழர் தாயக அரசியல் தலைவர்கள் , புலத்து அரசியல் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்த நிகழ்வொன்றில் , சிறப்புரையொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி . உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றியிருந்தார் .

மாகாணசபைத் தேர்தல்கள் , இணக்க அரசியல் , அரசியல் தீர்வு , தமிழர் அரசியலின் வெளியுறவுக் கொள்கை , சர்வதேச நிலைப்பாடு என பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்த அமைந்திருந்த பிரதமர் வி உருத்திரகுமாரன் உரையின் முக்கிய பகுதிகள் . :

மாகாணசபைத் தேர்தல்கள் :

சிறிலங்காவின் 6 வது அரசியலமைப்புச் திருத்தச்சட்டம் காரணமாகவும் , இராணுவ அடக்கு முறை காரணமாகவும் தமிழர் தாயகத்தில் ஓரு முழுமையான அரசியல் வெளியற்ற சூழலின் பின்புலத்தில் இருந்துதான் நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலை நாம் நோக்க வேண்டும் .

மாகாண சபைத் தேர்தல்கள் 1977 ம் ஆண்டு தேர்தலின் மக்கள் ஆணையினை மாற்றம் செய்ததென்ற சர்வதேசத்தின் பார்வைக்கு நாங்கள் முன்வைக்கின்ற கோரிக்கை சிறிலங்காவின் 6 வது அம்ச சட்டத்திருத்தத்தினை நீக்விட்டு வாக்கெடுப்பினை நடத்துங்கள் .

சிறிலங்காவின் 6 வது அரசியல் சட்டத் திருத்தத்தினை நீக்குவதென்பது என்பது தமீழீழம் எனக் கூறுவதற்கு இணையாகாது . அது ஒரு மனித உரிமைப் பிரச்சனை . கருத்துச் சுதந்திரப் பிரச்சனை . பேச்சு சுதந்திரப் பிரச்சனை .

எனவே தாயக அரசியல் தலைவர்களும் , புலத்து அரசியல் அமைப்புக்களும் இதனை ஒரு பொதுவேலைத்திட்டமாக எடுத்துக் கொண்டு , சிறிலங்காவின் 6 வது அரசியல் சட்டத் திருத்தத்தினை நீக்கவேண்டுமென்ற கோரிக்கையினை சர்வதேசத்திடம் நாங்கள் முன்வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .

இணக்க அரசியல் :

இன்று தமிழர்களுக்கு போதிக்கப்படுகின்றது இணக்க அரசியலை நடத்துங்கள் என்று . இணக்க அரசியல் என்பது தமிழர்களுக்கு ஒன்றும் புதிதல்ல . தமிழர்களால் இது ஏலவே முன்வைக்கப்பட்டது .
1948 ம் ஆண்டு முதல் 1956 ம் ஆண்டு வரை திரு . ஜீ.ஜீ. பொன்னம்பல்தாலும் , 1965 ம் ஆண்டிலிருந்து 1970 ம் ஆண்டு வரை தந்தை செல்வாவாலும் இணக்க அரசியல் அங்கு மேற்கொள்ளப்பட்டது .

ஆனால் சிங்கள பேரினவாதம் அந்த இணக்க அரசியலை நிராகரித்து மட்டுமல்ல ஒரு சிறுபான்மையினருக்கு உள்ள உரிமைகளைக் கூட தர மறுத்தது . அவ்வாறு மறுத்த சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் ஓர் தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை . தமிழ்மக்கள் ஓர் மக்கள் கூட்டமாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை . இது வரலாறு தந்த பாடம் . தேசியத் தலைவர் கூறியது போல வரலாறு எங்கள் வழிகாட்டி . அதன் அடிப்படையில்தான் எங்கள் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் .

அரசியல் தீர்வு :

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை எந்தவொரு அரசியல் தீர்விலும் முதன்மை பெற வேண்டும் .
இது முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கல்ல . இன்னுமொரு முள்ளிவாய்க்கால் நடைபெறக் கூடாது என்பதற்காகவே , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை எந்தவொரு அரசியல் தீர்விலும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

வெளியுறவுக் கொள்கை :

இலங்கைத்தீவில் தமிழர்களுடைய அரசியல் தேசியப் பிரச்ச , னை இந்து மகா சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் உள்ள காரணத்தினால் தொன்றுதொட்டு சர்வதேச பரிதமாணம் கொண்ட பிரச்சனையாகவுள்ளது .

இந்த சர்வதேச அரசியல் இராஜதந்திர கேந்திர நிலைக்குள் எமது நலன்களையோ , விருப்புக்களையோ நாங்கள் பலியிடத் தேவையில்லை .

சர்வதேச அரசுகளின் நலன்களும் , எங்களுடைய அரசியல் நலன்களும் என்றுமே முரண்படத் தேவையில்லை . இரண்டும சமாந்திரமாக பயணிக்க வேண்டும் . இரண்டும் சமாந்திரமாக பயணித்து ஒரு வெளியில் , ஓரு புள்ளியில் சந்திப்பதற்கான ஒர் வெளியுறவுக் கொள்கையினை நாம் கொண்டிருக்க வேண்டும் .

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அடுத்த அமர்வில் இந்த வெளிவிவகாரக் கொள்கை குறித்து
விவாதிக்க இருக்கின்றோம் . .

இந்தியா - சர்வதேசம் :

இந்தியாவின் பங்கு என்பது மிகமிக முக்கியமான பங்கு . இந்தியாவினை ஈழத்தமிழ்மக்கள் நேசசக்தியாகவே என்றும் பார்த்து வந்துள்ளார்கள் .

தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்திய ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு என்றுமே அச்சுறுத்தலாக இருக்காது . இதனை இந்தியா புரிந்து கொண்டு தன்னுடைய நிலைப்பாட்டினை மாற்ற வேண்டும் .
இன்று எந்தவொரு நாடும் தமிழீழத்திற்கான ஆதரவு இல்லை . அதனை ஏற்றுக் கொள்கின்றோம் . ஆனால் சர்வதேச அரசியலில் நிலைப்பாடுகள் என்றுமே நிலைத்து நிற்பதில்லை .

1990 ம் ஆண்டு சுலோவேனியா சுதந்திர பிரகனடம் செய்த பொழுது அதனை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா , 20 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னைய யூகோசுலோவியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு சவப்பெட்டிக்கு ஆணியடித்து சுலோவேனியாவினை அதே அமெரிக்கா ஏற்றுக் கொண்டது .

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் :

இலங்கைத்தீவின் அரசியல் பிரச்சனைக்கு தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசே ஒரே தீர்வு என்ற வரலாற்று பட்டறிவை இலக்காக கொண்டு இயங்கி வருகின்றது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் .

ஒரு தேசத்தின் விடுதலை என்பது அந்த தேசத்தின் உரிமை . மனித உரிமைகளின் தாயாக வர்ணிக்கப்படும் சுயநிர்ணய உரிமையின் வழிவந்த உரிமை .

அந்த உரிமையினை பிரயோகிப்பதற்கு அந்த உரிமையினை அனுபவிப்பதற்கான தமது விருப்பை தமது ஆணையினை தமிழீழ மக்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள் .

1976 ம் ஆண்டு தேர்தல் ஆணை முடிவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் முன்னூறு ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் ஈகம் இவை அந்த விடுதலை வேட்கையின் சாட்சியங்களாக அமைகின்றன .

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னர் நிகழ்வுபூர்வமான தமிழீழ அரசு நிர்மூலமாக்கப்பட்ட பின்னர் , அங்கு ஒரு அரசியல் வெளியற்ற காரணத்தினால் தமிழ் மக்கள் தங்களின் அரசியல் அபிலாசையினை முழுமையாக பிரதிபலிப்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கினார்கள் .

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி . உருத்திரகுமாரனின் உரை அமைந்திருந்தது

Post a Comment Blogger

 
Top