யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண பொது மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமென
அரசினால் அறிவிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் அது குறித்த விண்ணப்பங்களை குறித்த திணைக்களத்துக்கு அனுப்பி நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லைஎன பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கென அரசாங்கம் புனர்வாழ்வு அதிகாரசபையூடாக பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரியிருந்தது . அவ்விண்ணப்பப் படிவங்களைப் பெற்ற பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் குறிப்பிட்ட அதிகாரிகளினால் இவ்விண்ணப்பப்பத்திரத்தை அத்தாட்சிப்படுத்தி புனர்வாழ்வு அதிகாரசபைக்கு அனுப்பி வைத்தனர் .

இவ்வாறு பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பி சுமார் நான்கு மாதங்கள் கடந்து விட்ட போதிலும் அரசாங்கம் இதுவரை எவ்வித நஷ்ட ஈடுகளையும் வழங்கவில்லையென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் .

ஆகவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

யாழ் நிருபர் .

Post a Comment Blogger

 
Top